Advertisement

பாலாஜி பள்ளியில் சிறப்பு கருத்தரங்கம்

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடமைகள் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை கருணா இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு பள்ளி தாளாளர் அழகப்பன் தலைமை தாங்கினார். நிர்வாக ஆலோசகர் ராதாகிருஷ்ணன்வரவேற்றார். கருணா நிறுவன துணைத் தலைவர் சுரேஷ் கன்காரியா, மாணவர்களுக்கு நன்னடத்தை விதிகளை ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது குறித்தும், நிறுவனத்தின் கல்வி அதிகாரி ராமமுருகேசன் ஆசிரியர்களின் நடத்தை குறித்தும், வழக்கறிஞர் அழகம் பெருமாள் சுற்றுபுற சூழலை பராமரிப்பது குறித்துபேசினர்.
விலங்குகள் பெருகினால் மனித இனத்திற்கு ஆபத்தா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் நடுவர்கள் விலங்குகள் பெருக்கத்தை இயற்கையே சரி செய்து கொள்ளும் என தீர்ப்பளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர் சுலோச்சனா நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement