Advertisement

புதுச்சேரி பல்கலை ஆண்டு விழா துணைவேந்தர் வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 34ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, துணைவேந்தர் குர்மீத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம், கடந்த 1985ம் ஆண்டு, அக்டோபர் 16ம் தேதி நிறுவப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழகம் துவங்கி 34வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.இதை முன்னிட்டு, துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், அனைவரும் இணைந்து பல்கலைக்கழகத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். சமீபகாலமாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசையில் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement