Advertisement

மூன்றாவது நாளாக மாணவர்கள் போராட்டம்

பொன்னேரி: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழத்தின் கீழ், பொன்னேரி, நாகப்பட்டினம், துாத்துக்குடி ஆகிய இடங்களில் மீன்வளக் கல்லுாரிகள் செயல்படும் நிலையில், சுயநிதி மூலம் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, பொன்னேரி மீன்வளக் கல்லுாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். கடந்த, 9ம் தேதி துவங்கிய போராட்டம், 3வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.நேற்று முன்தினம் இரவு, கண்களை கறுப்பு துணியால் கட்டிக்கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நேற்று காலை, முட்டி போட்டபடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.மாணவர்கள் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கல்லுாரி நிர்வாகம் தொடர் பேச்சில் ஈடுபட்டு உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement