Advertisement

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கனவு ஆசிரியர் விருது


திருப்பூர்: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு, கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது.
அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், மாவட்டத்தில் சிறந்த 6 பேருக்கு, தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச்சான்றுடன், கனவு ஆசிரியர் விருது, வழங்கப்பட உள்ளது.முதன்மைக்கல்வி அலுவரை தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மூத்த வட்டாரக்கல்வி அலுவலர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர், அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட கூடுதல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும், கனவு ஆசிரியர் தேர்வுக்குழு அமைக்கப்படுகிறது.
கணினி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்றுவிப்போரில் சிறந்த 4 பேர், கல்வி இணைச்செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 4 பேர், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் 4 பேர் என, மாவட்டத்திற்கு 12 ஆசிரியர் வீதம், மாநிலக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும்.பரிந்துரைக்கப்படும் ஆசிரியர், குறைந்தது 5 ஆண்டு அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். நிர்வாகப்பணியுடன் பகுதி நேரக் கற்பிக்கும் பணியில் ஈடுபடுவோரும், தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்றோரும் பட்டியலில் இடம்பெறக்கூடாது.
மாநிலத்தேர்வுக்குழு இவர்களில், 6 பேரை கனவு ஆசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யும். பரிந்துரைகள், வரும் அக்., 15ம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும்.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement