Advertisement

ரூ.300 கோடி கல்வி கட்டணம் வழங்க கோரிக்கை

தஞ்சாவூர்: மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின்படி மாணவர்களை சேர்த்த வகையில் 2018 - 19ம் கல்வியாண்டுக்குரிய கட்டண பாக்கி 300 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் சங்கத்தின்மாவட்ட மாநாடு நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற நந்தகுமார் கூறியதாவது: அங்கீகாரம் பெற்று 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி மாணவர்களைச் சேர்த்த வகையில் 2018 - 19ம் கல்வியாண்டுக்குரிய கட்டண பாக்கி 300 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டுக்கான கட்டணம் இதுவரை வழங்கப்படவில்லை.
அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக தொடர் அங்கீகாரத்தையும் நிரந்தர அங்கீகாரத்தையும் மூன்று ஆண்டுகளுக்கு தர வேண்டும். புதிதாக பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரமாட்டோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்கிறோம். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement