Advertisement

கவுன்சிலிங் மூலம் கலை, அறிவியல் அட்மிஷன்


பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கட்டடவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர, தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. அனைத்து கல்லுாரிகளின் காலி இடங்களையும் ஒருங்கிணைத்து, மாநில அளவில், ஒற்றைச் சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதைப் பின்பற்றி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கைக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் ஏற்கனவே அறிவித்தார்.
இதன்படி, இந்த கவுன்சிலிங்கை நடத்தும் முடிவுகள் மற்றும் அதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் குறித்து, உயர்கல்வித் துறையில், முதற்கட்ட ஆலோசனை நடந்துள்ளது. இது குறித்து, தலைமை செயலரிடமும், உயர்கல்வித் துறையில் ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது. வரும் கல்வி ஆண்டில், இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தலாமா என்பதை, முதல்வர், இ.பி.எஸ்., வழியாக, உயர்கல்வி அமைச்சர், அன்பழகன் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement