Advertisement

மதுரை காமராஜ் பல்கலையில் சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி


சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள், டிச., 2ல் துவங்கும் என, மதுரை காமராஜ் பல்கலை அறிவித்துள்ளது.
இது குறித்து, மதுரை காமராஜ் பல்கலையில் செயல்படும், அண்ணா நுாற்றாண்டு சிவில் சர்வீசஸ் பயிற்சி அகாடமியின், பயிற்சி இயக்குனர்,மூக்கையா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் நிதியுதவியுடன், இப்பயிற்சி அகாடமி செயல்படுகிறது. இங்கு, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த கட்டணமும் இன்றி, இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். முதல் நிலை தேர்வுக்கு பயிற்சி பெறும் பட்டதாரிகளை தேர்வு செய்ய, நவ., 10ல், தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் முன்னிலை பெறும், 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, இனச் சுழற்சி அடிப்படையில், இலவச பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
டிசம்பர், 2 முதல், 2020 மே, 30 வரை, இலவச பயிற்சி வழங்கப்படும். வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு, தங்குமிடம் மற்றும் மாதந்தோறும் உணவு ஊக்கத் தொகை, 2,000 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை, www.mkuniversity.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக்., 10க்குள், பயிற்சி இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் தகவல்களை, 0452 2458231 மற்றும் 98656 55180 ஆகிய தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement