Advertisement

பாதி விலையில் அரிய தமிழ் நுால்கள்

சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், அரிய தமிழ் நுால்கள், பாதி விலைக்கு விற்கப்பட உள்ளன.
சென்னை, தரமணியில் உள்ளது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். தமிழுக்காக தனித்து செயல்படக் கூடிய இந்த நிறுவனத்திற்கான செயல் திட்டத்தை வழங்கியவர், முன்னாள் முதல்வர், அண்ணாதுரை. தனிநாயகம் அடிகளின் முயற்சியில், 1970ல் ஏற்படுத்தப்பட்ட இந்த நிறுவனம், 1,700க்கும் மேற்பட்ட, அரிய தமிழ் நுால்களை பதிப்பித்துள்ளது. இந்நிறுவனம் தற்போது, அரிய நுால்களை, பாதி விலைக்கு விற்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் இயக்குனர், விஜயராகவன் கூறியதாவது: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அமையக் காரணமான, முன்னாள் முதல்வர், அண்ணாதுரையின், 110வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் மாணவர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பயன் பெறும் வகையில், அரிய தமிழ் நுால்களை, 50 சதவீதம் வரை, தள்ளுபடியில் விற்பனை செய்ய உள்ளது. இந்த விற்பனை, வரும், 15ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement