Advertisement

அரசு கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் உதயம்

Share

தமிழகத்தில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். அந்த வகையில், 45 அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளில், 81 புதிய பாடப்பிரிவுகளை, நடப்பாண்டிலேயே துவங்குவதற்கு, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இளநிலையில், 69 பாடப்பிரிவுகளும்; முதுநிலையில், 12 பாடப்பிரிவுகளும் துவங்கப்பட உள்ளன. இவற்றில் புதிதாக, 2,500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.ஏற்கனவே, கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களும், புதிய பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு, அந்தந்த கல்லுாரிகளை, மாணவர்கள் அணுக வேண்டும்.
இது குறித்து, தமிழக உயர் கல்வி அமைச்சர், அன்பழகன் கூறியதாவது:ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 961 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, இ.பி.எஸ்., ஆட்சியில், இதுவரை, 624 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, 1,585 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.
நடப்பு கல்வி ஆண்டில், 81 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படுகின்றன. இதன் வழியாக, 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், கூடுதலாக பலன் அடைவர். அதேபோல், புதிய பாடப்பிரிவுகளை நடத்துவதற்கு, முதலாம் ஆண்டுக்கு, 167 உதவி பேராசிரியர்களும், இரண்டாம் ஆண்டுக்கு, 145 மற்றும் மூன்றாம் ஆண்டுக்கு, 136 புதிய உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement