Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா! கோவையில் ஐந்து பேர் கும்பல் கைது


கோவை: கோவையில், கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா சிகரெட் விற்பனை செய்த, ஐந்து பேர் கும்பலை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவையில், கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் தடுக்க, தனிப்படைகள் அமைத்து, கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இருந்தும், ஒரு சில இடங்களில், கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலையில், கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், குறிப்பிட்ட இடங்களுக்கு, மாறுவேடத்தில் சென்று கண்காணித்தனர். அப்போது, கல்லுாரி மாணவர்களுக்கு, சிகரெட்டில், கஞ்சா அடைத்து விற்பனை செய்வது, கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, புலியகுளம், அம்மன்குளம் பகுதிகளைச் சேர்ந்த, 19 - 23 வயதுடைய, ஐந்து வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இக்கும்பல், ஒரு கஞ்சா சிகரெட்டை, 100 முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளது.
இவர்களுடன், தொடர்பில் இருந்த கல்லுாரி மாணவர்கள் யார் என்பது குறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், சிறையில் அடைக்கப் பட்டனர்.கோவை, கே.ஜி., சாவடி செக்போஸ்டில், கடந்த வாரம், போலீசார் நடத்திய வாகன சோதனையில், பாட்டிலில் அடைத்து, கேரளாவுக்கு கடத்த இருந்த கஞ்சா ஊறுகாயை கைப்பற்றினர். இது தொடர்பாக, இருவரை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement