Advertisement

இளந்தமிழர் இலக்கிய பட்டறை

சென்னை: கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் இலக்கியங்களை கற்பிக்கும் வகையில், மதுரை, உலகத் தமிழ் சங்கத்தில், இளந்தமிழர் இலக்கியப் பட்டறை என்னும் நிகழ்ச்சி, 18ம் தேதி துவங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும், 250 கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழ் இலக்கியம், தனித்தமிழ் பேச்சு உள்ளிட்ட பயிற்சிகளை, ஒரு வார காலத்துக்கு, தமிழ் வளர்ச்சித் துறை அளித்து வருகிறது. மேலும், 20 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும், இந்த பயிற்சியில், இந்த ஆண்டு, 54 தமிழறிஞர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில், மாணவர்களுக்கு, தமிழ் இலக்கிய பயிற்சி அளிக்கின்றனர்.
வரும், 18 முதல், 24ம் தேதி வரை, மதுரை, தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும், இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, உணவு, உறைவிடம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். தமிழ் இலக்கியம் மட்டுமின்றி, மரபுக் கலை சார்ந்த நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement