Advertisement

செப்., 7ல் சந்திரயான் - 2 நிலவை அடையும்

ஆமதாபாத்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால், நிலவுக்கு அனுப்பப்பட்ட, சந்திரயான் -2 விண்கலம், வரும், 20ல், நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும், என, இஸ்ரோ தலைவர், கே.சிவன் நேற்று கூறினார்.
இந்திய விண்வெளித்துறையின் தந்தை என போற்றப்படும், விக்ரம் சாராபாயின், பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக, குஜராத் மாநிலம், ஆமதாபாதுக்கு நேற்று வந்த சிவன், நிருபர்களிடம் கூறியதாவது:
நிலவை ஆராய, கடந்த மாதம், 22ல், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் ஏவப்பட்டு உள்ள, சந்திரயான் - ௨ விண்கலம், 3850 கிலோ எடை உடையது. நிலவை நோக்கிய அதன் பயணத்தில், இதுவரை, ஐந்து முறை, அதன் சுற்று வட்டப் பாதை உயர்த்தப்பட்டது. இப்போது, பூமியின் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் அந்த விண்கலம், 14ம் தேதி, அதிகாலை, 3:30 மணிக்கு, நிலவை நோக்கி உந்தப்படும்.
அப்போது, பூமியிலிருந்து பிரிந்து, நிலவை நோக்கி, சந்திரயான் - 2 பயணம் மேற்கொள்ளும். ஆகஸ்ட், 20ல், நிலவின் சுற்று வட்டப் பாதையை அடையும்; செப்டம்பர், 7 ல் நிலவை அடையும்.அடுத்து வரும் மாதங்களில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி, பல, சிறிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவ உள்ளனர். டிசம்பரில், மிக முக்கியமான திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அது, சிறிய ராக்கெட் ஏவுதலாக இருக்கும். இந்த முயற்சியை, இப்போது தான் முதல் முறையாக மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement