Advertisement

மாற்றுத்திறனாளிகள் சேவைக்கு தேசிய விருது பெற வாய்ப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிவோர், அவர்களுக்காக சேவை புரிவோர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, 14 பிரிவுகளில், தேசிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு, டிசம்பர், 3ல், டில்லியில் விருதுகள் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விபரங்களை, www.disabilityaffairs.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பரிந்துரையுடன், வரும், 19ம் தேதிக்குள், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • தமிழ் மைந்தன் - coiambatore,India

    திமுகவின் ஊழலை தொடர்ந்து மறுத்துவரும் மனுஷ்ய புத்திரனுக்கு கிடைக்குமா?...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement