Advertisement

விண்ணில் பாய்கிறது, சந்திரயான் - 2

சென்னை:நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய, சந்திரயான் - 2 விண்கலத்தை, இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இஸ்ரோ நிறுவனம், நாட்டின் தகவல் தொடர்பு, வானிலை உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ். எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன், செயற்கைக்கோள்களை, விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
தற்போது, நிலவின் தென் துருவ பகுதியில் உள்ள கனிம வளங்கள் மற்றும் அங்கு மக்கள் வாழ சாத்தியம் உள்ளதா என ஆய்வு மேற் கொள்ள,சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை, இஸ்ரோ, உருவாக்கியுள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, ஜி.எஸ். எல்.வி., மாக் 3 - எம்1 ராக்கெட், 15ம் தேதி, அதிகாலை, 2:51 மணிக்கு,விண்ணில் பாய இருந்தது.
அதற்கு, 56 நிமிடங்கள், 24 வினாடிகள் இருந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சந்திரயான் - 2 விண்கலம் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக, இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது, ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. இதை அடுத்து, சதீஷ் தவான் மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சந்திரயான் - 2 விண்கலத்தை சுமந்தபடி, ஜி.எஸ்.எல்.வி., மாக் 3 - எம் 1 ராக்கெட், இன்று மதியம், 2:43 மணிக்கு, விண்ணில் பாய்கிறது. இதற்கான, கவுன்ட் டவுன் நேற்று மாலை, 6:43 மணிக்குதுவங்கியது.
இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவன், சென்னையில், நேற்று, அளித்த பேட்டி:
சந்திரயான் - 2 விண்கலம், விண்ணில் ஏவுவதற்கான, அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன.கடந்த, 15ம் தேதி, ராக்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டன. அனைத்து பணிகளும் முடிவடைந்து, விண்கலம் நல்ல நிலையில் உள்ளது.
விண்ணில் ஏவப்பட்ட பின், சந்திரயான் - 2 விண்கலம், 48 நாட்களில், 15 கட்டங்களை கடந்து, நிலவின், தென் துருவத்தில் தரை இறங்கும். உலகின் எந்த நாடும், எடுக்காத முயற்சியை, நம் நாடு எடுத்துள்ளது.உலக அரங்கில், புதிய அறிவியல் கண்டுபிடிப்பாக, நிலவில் தண்ணீர் இருப்பதை, சந்திரயான் - -1 விண்கலம் கண்டுபிடித்தது.தற்போது, நிலவின் தென் துருவத்தில்,சந்திரயான் - -2 விண்கலம் ஆய்வு செய்ய உள்ளதால், விஞ்ஞான ரீதியாக, அதிக தகவல்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement