நடப்பு கல்வியாண்டில் ஏழு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.எட். மாணவர்கள் சேர்க்கை இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒற்றைச்சாளர முறையில் நடக்க உள்ளது.
இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. விண்ணப்பங்கள் ஜூலை 28ம் தேதி வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் செயலர் தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பி.எட் சேர்க்கைக்கான வழிகாட்டி முறைகளை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என வெலிங்டன் சீமாட்டி கல்வியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
பி.எட்., சேர்க்கைக்கு விண்ணப்பம் வினியோகம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!