Advertisement

இந்தியாவை சர்வதேச நாடுகள் திரும்பி பார்க்கும்

Share

ஸ்ரீவில்லிபுத்துார்: சந்திராயன்-2 விண்கலம் நிலவில் போய் இறங்கும்போது ,சர்வதேச நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும், என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் கூறியதாவது: விண்வெளியை தாண்டி நிலவிற்கு செல்லமுடியுமா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் இறங்கும்போது, இதுவரை யாரும் செல்லாத இடமாக இனி எல்லோரும் இறங்ககூடிய இடமாக இருக்கும். இது விண்வெளித்துறையில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும். நிலவில் ஆம்ஸ்ட்ராங்க் இறங்கிய பிறகு அமெரிக்கா எழுச்சி பெற்றது.
அதுபோல் 50 ஆண்டுக்கு பின் சந்திராயன் இறங்குவது இந்திய விண்வெளித்துறைக்கு ஒரு மிகப்பெரிய எழுச்சியை தரும். சர்வதேச நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும். விண்வெளியில் சாதிக்க நினைக்கும் நாடுகள் இந்தியாவை பின்பற்ற விரும்புவார்கள். இதனால் விண்வெளித்துறையில் அரசாங்கத்தை தாண்டி தனியார் துறைகளும் வரும் வாய்ப்புள்ளது, என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement