Advertisement

நீட் தேர்வு ரத்து அன்புமணி வலியுறுத்தல்


சென்னை: உச்ச நீதிமன்றத்தில், சிறப்பு மனு தாக்கல் செய்து, நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: நாடு முழுவதும், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நீட் தேர்வு, மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துகிறது; கல்வி வணிகமாவதைத் தடுக்கிறது என, புகழாரங்களைச் சூட்டி, மக்களையும், மாணவர்களையும், மத்திய அரசு, இனியும் ஏமாற்ற வேண்டாம்.
மூன்று ஆண்டுகளில், நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறியுள்ளதா என, சமூகநீதியில் அக்கறை கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து, ஆய்வு செய்ய வேண்டும். அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி, முடிவெடுக்க வேண்டும்.இதைச் செய்ய, மத்திய அரசு தவறினால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக அரசு சிறப்பு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அன்புமணி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ashanmugam - kuppamma,India

    அறிவாளி டாக்டர்கள் இருக்கும்போதே தவிர்க்க முடியாமல் நோயாளிகள் மிக பெரிய ஆப்ரேஷன் அதாவது மூலை, தண்டுவடம், கிட்டி, இதயம், கனையம் மற்றும் கல்லீரல் ஆகிய அறுவை சிகிச்சை ஆப்ரேஷன் செய்ய அதி புத்திசாலியும் மருத்துவ துறையில் உயரிய பட்டபடிப்பும், போதுமான முன் அனுபவமும் தேவை. இதனை ஊர்ஜிதம் படுத்த நீட் போன்ற தகுதியை நிர்ணயிக்கும் ஒர் தேர்வு தேவை. இதனை ரத்து செய்து, சராசரி மற்றும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை மருத்துவ துறைக்கு தேர்ந்தெடுத்தால் நோயாளிகளின் நிலமை என்னவாகும்? இதே அன்புமணி ராமதாஸ் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு ஏன் நல்ல மருத்துவ அனுபவம் பெற்ற டாக்டரை அணுக வேண்டும்? சாதாரண ஊரில் உள்ள பெரிய மருத்துவ மனயை நாடலாமே? ஏன் தலை நகர் ஜாம்பவான் ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும்? 50 மார்க் எடுத்த மாணவ மாணவியும் 90/95 மார்க் எடுத்த மாணவ மாணவியும் ஒன்னா? ஏன் ஓட்டலில் A,B,C என மூன்று பிரிவு வைத்துள்ளார்கள்? எல்லாத்தையும் ஒரே பிரிவாக வைத்திருக்கலாமே? இன்னும் சொல்லாபோனால் நுகர்வோர் பொருட்களில் ஏன் 5,4,3 ஸ்டார் என தரத்தை குறிக்கும் சிம்பிள் தரவேண்டும்? எல்லாம் ஒரே விலையா விற்க்கின்றார்கள்? ரயில் பயணம் செய்தாலும் A,B,C மூன்று வகுப்பு ஏன்? தமிழ் நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏன் 40-50% சதவிகிதம் எடுத்த மாணவ மாணவிகளை சீட் கொடுத்து சேர்க்க கூடாது? ஏன் IAS/IPS UPSC தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும்? ஏன் CA/ICWA போன்ற துறைகளுக்கு முன் தேர்வு எடுத்து தேர்ந்தெடுக்க வேண்டும்? காரணம் தொழில் துறையும், விஞ்ஞான துறையும், வர்த்தக வாணிப துறையும் எந்த தவறும் குறையும் பிழையும் இன்றி சிறப்பாக செம்மையாக ஐந்து நட்சத்திர அங்கீகாரம் பெற்று உலக நாடுகளுடையே இந்தியா முதன்மை பெற்று முன்னோடியாக திகழ தான் இந்த மாதிரியான கடுமையான தேர்வுகளை கொண்டு வந்தார்கள் என்பதை பகுத்தறிவு ஞானம் கொண்ட ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்துப் செயல்பட வேண்டும்." பாரத மாதாகிக்கு ஜே வந்தே மாத்திரம்".

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement