Advertisement

இசை பள்ளிக்கு சொந்த இடம் கிடைக்குமா? .

Share

கடலுார்: கடலுார் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு, சொந்த இடம் ஒதுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய அடிப்படை வசதிகள் இன்றி, இசை பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், 1997ம் ஆண்டு, திருநெல்வேலி, திருச்சி, புதுக்கோட்டை, கோவை உள்ளிட்ட இடங்களில், முதற்கட்டமாக மாவட்ட அரசு இசை பள்ளிகள் துவக்கப்பட்டது. இதையடுத்து, 1998ம் ஆண்டு, கடலுார், விழுப்புரம், கரூர், பெரம்பலுார் ஆகிய இடங்களில் மாவட்ட இசை பள்ளி துவக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அரசு இசை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.கடலுார் டாப்தமிழகத்தில் உள்ள 17 இசை பள்ளிகளில், கடலுார் மாவட்ட அரசு இசை பள்ளியில் மட்டும் அதிகபட்சமாக 105 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடலூர் மாவட்ட அரசு இசை பள்ளி இயங்கி வரும், பழைய பத்திரப் பதிவு அலுவலக வளாகம் காடு போல் காட்சி அளிக்கிறது.
இதேபோல், இப்பள்ளி மாணவர்களின் இசை திறனை கண்டு, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள், பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்த பள்ளியில், பயின்ற 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இசைக் கச்சேரி நடத்தி வருகின்றனர்.
மேலும், பலரும் வெளிநாடுகளுக்கு சென்று, புகழ் பெற்று விளங்குகின்றனர்.சேர்க்கை தகுதிகள் இசை பள்ளியில் 13 வயது முதல் 25 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் சேரலாம். குரலிசை வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் பிரிவிற்கு ஏழாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது.நாதஸ்வரம், தவில், தேவாரம் பிரிவிற்கு, தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.கல்விக் கட்டணம் ஆண்டுக்கு, ரூ152 மட்டுமே. ஏழை மாணவர்களுக்கு, அரசு விதிகளின்படி தங்கும் விடுதி, உணவு வசதி உண்டு.
மேலும், அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். இசை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், மூன்று ஆண்டுக்கு, மாதம் ரூ.400 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. எதிர்கால பயன்கள்இசை பள்ளியில் பயின்று முடிப்பவர்கள், சிறந்த இசை கலைஞராக உருவாக முடியும். அரசு, அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மற்றும் சுயநிதி தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணி புரியலாம். தனியார் டிவிக்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், இசை போட்டிகளில் பங்கேற்பதுடன், நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்றலாம்.அகில இந்திய வானொலி, துார்தர்ஷன் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட கலைஞராக நிகழ்ச்சிகள் அளிக்கலாம்.

இசைக் கல்வியில், பட்டயம், இளம், முதுகலை பட்டங்கள், டாக்டர் பட்டம் போன்ற உயர்கல்வி பயில முடியும். மேடைப் பாடகராகவும், சொந்தமாக இசைக் குழு அமைக்கலாம்.பாம்புகள் அச்சுறுத்தல்கடலுார் புதுப்பாளையம் மெயின் ரோட்டில், தனியார் வாடகை கட்டடத்தில் மாவட்ட அரசு இசை பள்ளி துவங்கப்பட்டது. பின்னர், அந்த கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து, கடலுார் சப்-ஜெயில் ரோடு, பழைய பத்திரப்பதிவு அலுவலக கட்டடத்தில், செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மரங்கள் மற்றும் புதர்கள் மண்டிக் கிடப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மேலும், போதிய கழிப்பறை வசதியின்றி, மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். பள்ளியில் எதிர்புறம் உள்ள கழிப்பறை கட்டடம், பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. இதனை சீரைமத்திட வேண்டும்.இடம் கிடைக்குமா?கடலுார் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு, சொந்த கட்டடம் கட்டுவதற்கு, இடம் ஒதுக்கி தருமாறு, மாவட்ட நிர்வாகத்திடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப்பர் மலை பகுதியில், இசை பள்ளிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய, மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இருந்தாலும், வெளியூரில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு சிரமம் ஏற்படும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.
கடலுார் நகர பகுதிக்குள் அரசு இடத்தை ஒதுக்கீடு செய்தால், ரூ. ஒரு கோடி வரை செலவு செய்து, இசை பள்ளிக்கான கட்டடம் அமைப்பதற்கு, கலை பண்பாட்டுத்துறை தயாராக உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement