Advertisement

பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர உத்தரவு

சேலம்: தமிழகத்தில், கடந்த டிசம்பரில், நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில், 2,381 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், துவக்க பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள், இம்மையங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து, சில ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்துக்கு சென்றதால், எல்.கே.ஜி., வகுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
கடந்த, 22ம் தேதி அளித்த தீர்ப்பில், இடைநிலை ஆசிரியர்களை, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு நியமித்ததில் தவறில்லை என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், பள்ளி திறக்கும் நாளன்று, அங்கன்வாடி மையங்களில், பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ashanmugam - kuppamma,India

    பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒரு கல்வி இலாகா மந்திரி செங்கோட்டையன். எப்படி ஏழை எளிய நடுத்தர மக்களின் பிள்ளைகள் சமுதாயத்தில் படித்து பட்டம் பெற்று முன்னுக்கு வரமுடியும். ஒரு குழந்தையை pre schoolக்கு சேர்த்தால் பீஸ் வருடத்திற்கு ரூபாய் 40000/- Lkg,UkG சேர்த்தால் வருடத்திற்கு ரூபாய் 1 லட்சம் அப்படியே கணக்கு பார்த்தால் ஒரு பையனும், பெண்ணும் படித்து பட்டம் பெற்று வெளி வரும்போது 1 கோடி ஆகும். இது எந்த விதத்தில் நியாயம் தர்மம்? ஏழை எளிய பாமர நடுத்தர மக்கள் அரசியல்வாதிகளை போல் பல தலைமுறைக்கு கோடி கோடியாய் கொள்ளை அடித்து பதுக்கி வைத்துள்ளார்களா? என்பதை ஒவ்வொரு தமிழக மக்களும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். போதகுறைக்கு இமயமலை பயணம் செல்வதுபோல் முதுகில் வண்ணா மூட்டை துணி சுமப்பது போல் புத்தக சுமை வேற கேடு. கல்வி அமைச்சர் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் என்றாவது தெருவில் சுமந்து செல்லுமா? யாராவது நேரில் பார்த்தது உண்டா? அது மட்டும்மா, இன்னும் தண்ணீர் பாட்டில், ஸ்கூல் பேக், இதர பொருட்களையும் அதிக விலைக்கு வாங்கி பிள்ளைகள் சுமந்து செல்லவேண்டும். இந்த கொடுமை எல்லாம் கர்மயோகி கல்வி சாலை மத்திய உணவு கொண்டு வந்த முன்னால் தமிழக முதல்வர் காமராஜர் காலத்தில் இல்லையே? எல்லாம் பொது மக்களின் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை அரசாங்கத்தின் கேடு கெட்ட கல்வி தரத்தாலும், திட்டத்தாலும் தனியார் துறைக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளது. என்று ஒளி பிறக்கும் மாணவ மாணவி சமுதாயத்தினருக்கு?....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement