Advertisement

முதன்மை மாநிலமாக்க வேண்டும்; மருத்துவ கல்லூரிகளுக்கு அறிவுரை

Share

மருத்துவ துறையில், தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. தாய், சேய் மரணம் தடுப்பு, தொற்றா நோய் தடுப்பு, உடல் உறுப்பு தானம் ஆகியவற்றில், தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், சுகாதார துறையில், நாட்டின் முதன்மை மாநிலமாக, தமிழகத்தை மாற்ற, பல்வேறு முயற்சிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
சுகாதார துறையை முன்னேற்ற தேவையான புதிய கருத்துகளை தெரிவிக்க, அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரத் துறையில், முன்னேற்றங்களை ஏற்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, நோயாளிகளுடன் அதிகளவு தொடர்பு வைத்துள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ மாணவர்களின் கருத்துகளை கேட்டு, அதனடிப்படையில் செயல்படும் போது, பல புதிய திட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
இதுகுறித்து, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லுாரியில் இருந்து வழங்கப்படும் கருத்துகளை ஆய்வு செய்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement