Advertisement

22 இன்ஜி., கல்லுாரிகளுக்கு மூடு விழா; 92 கல்லுாரிகளில் அட்மிஷன் குறைப்பு


தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள் மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ. எனும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரத்தில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலையின் சார்பில் இன்ஜினியரிங் பாட இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.இதற்கு ஒவ்வொரு ஆண்டும் சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம் பெறுவதுடன் இணைப்பையும் புதுப்பிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு முன் அங்கீகாரம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி ஏ.ஐ.சி.டி.இ.க்கு விண்ணப்பித்த கல்லுாரிகளில் அண்ணா பல்கலை பேராசிரியர் குழு நேரடி ஆய்வில் ஈடுபட்டது. 537 கல்லுாரிகளின் வளாகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 250 கல்லுாரிகளில் நுாலகம் ஆய்வகம் ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட பல அம்சங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
இந்த பிரச்னைகளை சரிசெய்து அறிக்கை தர அண்ணா பல்கலை உத்தரவிட்டது. இதன்படி ஆய்வறிக்கை சமர்ப்பித்ததில் 150 கல்லுாரிகளுக்கு மட்டும் அவை ஏற்கனவே விண்ணப்பித்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த அண்ணா பல்கலை ஒப்புதல் அளித்தது.ஆனால் 92 கல்லுாரிகளுக்கு உள்கட்டமைப்பு குறைபாடு காரணமாக மாணவர் சேர்க்கையை குறைக்க உத்தரவிட்டது. இதன்படி 25 சதவீத இடங்கள் ரத்து செய்யப்பட்டன. 126 இளநிலை பாட பிரிவுகள் மற்றும் 69 முதுநிலை பாடபிரிவுகளில் 50 சதவீத இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்துள்ளது.
இதுதவிர பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு மட்டும் 22 கல்லுாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்த அனுமதி பெற்றுள்ளன. இந்த கல்லுாரிகள் படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து கல்லுாரிகளை மூட முடிவு செய்துள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement