Advertisement

மாணவர்கள் பாதுகாப்பு; இன்று விசாரணை

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் காஷ்மீர் மாணவர்களுக்கு, பாதுகாப்பு வழங்க கோரும் பொது நல மனு, உச்ச நீதிமன்றத்தில், இன்று(பிப்.,22) விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டது, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவர்கள், சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.அவசரம் கருதி, இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், என, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், காலின் கான்சால்வஸ், உச்ச நீதிமன்றத்தில் நேற்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, நீதிபதிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement