Advertisement

போதை ஆசிரியர் மீது புகார்

சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் போதையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பிப். 15 ல் பள்ளி நிர்வாகத்திடம் 11ம் வகுப்பு மாணவிகள் சிலர் கொடுத்த புகாரில், குறிப்பிட்ட ஆசிரியர் போதையில் ஆபாசமாகவும், மாணவிகளை தொட்டும் பேசுகிறார், என தெரிவித்திருந்தனர்.
மகளிர் போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். ஆசிரியர் தலைமறைவாகிவிட்டார்.போலீசார் கூறுகையில், சம்பவம் குறித்து புகார் வரவில்லை&', என்றனர். பள்ளி நிர்வாகம் கூறும்போது, புகார் குறித்து விசாரணை நடக்கிறது&', என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement