Advertisement

மாணவர்களுக்கு பாராட்டு விழா

மூங்கில்துறைப்பட்டு: மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தாகத்தீர்த்தபுரத்தில் வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., பயிற்சி முகாம் நடந்தது. இதில் 66 பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இம்முகாமில், பங்கேற்ற மூங்கில்துறைப்பட்டு கே.சி.எஸ்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தீயணைப்பு மற்றும் தீ மீட்பு பணி பயிற்சி, யோகா, அக்குபஞ்சர், ஜே.ஆர்.சி., வரலாறு, சாலை விழிப்புணர்வு மற்றும் முதலுதவி ஆகிய பயிற்சிகளில் சிறப்பாக செய்து காட்டியதற்காக, கே.சி.எஸ்.எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி முதல்வர் ஜெராடின் தலைமை தாங்கினார். துணை தலைமை ஆசிரியர் சுமதி, ஆசிரியர் டெய்சி முன்னிலை வகித்தனர். ஜே.ஆர்.சி., ஆசிரியர் சந்திரலேகா வரவேற்றார். மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement