Advertisement

யோகாவில் வென்ற மாணவர்கள்

திண்டுக்கல்:ஒடிசா மாநிலம் பூரியில், கடந்த பிப்.,6, 7 ம் தேதி தேசிய யோகாசன போட்டிகள் நடந்தது. இண்டியன் யோகா ஸ்போர்ட்ஸ் கான்பெடரேஷன் அமைப்பின் சார்பில் நடந்த இப்போட்டியில் திண்டுக்கல் சுவாமி விவேகானந்தா யோகா வித்யாலயா மாணவிகள் கே.ஸ்வஸ்திக், லக்சனா, செல்வநாகேஸ்வரி ஆகியோர் 3ம் இடம் பெற்றனர்.
மாணவியரை பயிற்சியாளர் தனலட்சுமி உட்பட பலரும் பாராட்டி னர்.மாணவியரில் லக்சனா, செல்வநாகேஸ்வரி ஆகியோர் வரும் மேயில் தாய்லாந்தில் நடக்க உள்ள சர்வதேச யோகாசன போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement