Advertisement

பல்கலை மாணவர்களுக்கு உதவி

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசின் நிதிஉதவி கிடைத்துள்ளது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபட்டிருந்தது.
கலசலிங்கம் பல்கலை பேராசிரியர் சிவா தலைமையில் மாணவர்கள் ராம்குமார் , சரவணன் ஆகியோர், வீணாகும் பிளாஸ்டிக் பாட்டில்களால் டைல்ஸ் தயாரித்தலுக்கான படைப்பு, பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் மாணவர்கள் சந்தோஷ்ராம் மற்றும் அபுபக்கர்சித்திக் சோலாா்பேனல் சுத்தம் செய்யும் கருவியை சமர்பித்திருந்தனர். பேராசிரியர்கள் மாணவர்களை பல்கலை வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர் சசிஆனந்த், துணைவேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement