Advertisement

ஒட்டு மொத்த கல்வியும் ஓரிடம்

திருப்பூர்: ஏட்டுக்கல்வி துவங்கி, வாழ்க்கை கல்வி வரை, அனைத்தும், திருப்பூர் சென்சுரி பள்ளியில் கற்று தரப்படுகிறது. இது குறித்து, திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் பள்ளி தாளாளர் ரேணுகாதேவி கூறியதாவது:
சென்சுரி பள்ளியில், கல்வியுடன், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு விளையாட்டு வழியில், மாண்டிச்சோரி முறையிலும், செய்முறை கல்வி மற்றும் ஒளிப்படம் அடங்கிய பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.எல்.டி.பி., முறையில் ஆங்கில புலமை வளர்க்கும் கல்வி, பாரதியார் பல்கலை தரச்சான்றுடன் கூடிய கம்ப்யூட்டர் வகுப்பு, மாணவரின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் போட்டி தேர்வு, யோகா, தேவார வகுப்பு மற்றும் தனித்திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் பயிற்சி, 9ம் வகுப்பு முதல் நடத்தப்படுகிறது.கடந்த, 2017ல் துவங்கப்பட்ட, தி ேஹாம் பள்ளியில், சர்வதேச தரத்திலான கேம்பிரிட்ஜ் பல்கலை கல்வி வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதுடன், பழந்தமிழர் விளையாட்டுகளும் கற்றுத் தரப்படுகின்றன. மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த இசை, நடனம், மிருதங்கம் வகுப்பு நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement