திருப்பூர்: திருப்பூரில், திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பில், 31வது பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பில், தமிழகம் முழுவதும், ஜோதிட வகுப்பு நடத்தப்படுகிறது.
திருப்பூர், கந்தசாமி செட்டியார் வீதியில் உள்ள, வாசவி வித்யாலயம் பள்ளி வளாகத்தில், ஜோதிட வகுப்பு நடந்து வருகிறது. நேற்று, 31வது பயிற்சி வகுப்பு துவங்கியது. ஜோதிட பேராசிரியர் மீனம் ராஜூ, புதிய மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் மற்றும் பயிற்சி முடித்தவருக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.
அவர் கூறுகையில், ''சமுதாயத்தில், ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற சமூக சிந்தனையுடன், 15 ஆண்டுகளாக ஜோதிட சாஸ்திர வகுப்பு நடத்தப்படுகிறது. தொடர்ந்து நான்கு வாரம், மாணவர் சேர்க்கை நடைபெறும். உன்னதமான தெய்வீக கலையை கற்று, சமுதாயத்துக்கு நல்வழி காட்டலாம். கூடுதல் விவரங்களுக்கு, 94430 42180 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
ஜோதிட பயிற்சி வகுப்பு மாணவருக்கு சான்றிதழ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!