Advertisement

பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளி, சமுதாய நலப்பணித்திட்டம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன் மற்றும் முருகையன் ஆகியோர் போக்குவரத்து விதிமுறைகள், அதனை கடைபிடிக்கும் வழிமுறைகள் குறித்து பேசினர். பின் மாணவர்களுடன் போக்குவரத்து விதிமுறை குறித்து கலந்துரையாடல் நடத்தினர்.பின் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், நல திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை திட்ட பொறுப்பாசிரியர் முகந்தன் செய்திருந்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement