Advertisement

பள்ளி பருவம்... அறிவு சுரங்கம்!

சூலுார்: பள்ளி பருவம் என்பது மாணவர்களுக்கு அறிவு சுரங்கம் என, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பள்ளி விழாவில் பேசினார்.
சூலுார் அடுத்த பீடம்பள்ளியில், வளர்மதி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ஸ்ரீசுக பிரம்ம மகிரிஷி வித்யாலயாமெட்ரிக் பள்ளியில், 14ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் நாகராஜன் தலைமை வகித்தார். முதல்வர் வனிதா ஆண்டறிக்கை வாசித்தார்.பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், பள்ளி பருவம் என்பது படிப்பின் அஸ்திவாரம். அது பலமாக இருந்தால்தான் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும்.
பள்ளி பருவம் மாணவர்களுக்கு அறிவு சுரங்கமாகும். சுரங்கத்தை ஆழமாக தோண்டும் பொழுது மதிப்பில் அடங்காத பொருட்கள் கிடைக்கும். அதுபோல ஆழமாக படித்தால், அறிவு மேம்படும், என்றார்.போட்டிகளில் வென்றவர்களுக்கு பள்ளி செயலாளர் வைத்தியநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். சி.ஐ.டி., தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் வசந்த ரத்னா, பீடம்பள்ளி ஊராட்சி முன்னாள் தலைவர் குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement