Advertisement

மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.புதுச்சேரி, தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவிக்கும், மேல் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் சம்மதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு, பத்திரிக்கைகள் வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.இதபற்றி தகவலறிந்த குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், திருமண மண்டபத்திற்கு சென்று, சிறுமிக்கு 18 வயது நிறைவு செய்ய இன்னும் 17 நாட்கள் உள்ளதால் திருமணம் செய்ய கூடாது என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.இதனை அறியாமல் மண்டபம் வந்த இரு வீட்டாரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement