Advertisement

செந்தமிழ் சொல் பேரகராதி விரைவில் வெளியீடு: முதல்வர்

சென்னை: செந்தமிழ் சொற்களுக்கான பேரகராதி, 8,000 பக்கங்களுடன், ஏழு தொகுப்புகளாக, விரைவில் வெளியிடப்படும், என, முதல்வர், பழனிசாமி தெரிவித்தார்.சென்னை, கலைவாணர் அரங்கில், திருவள்ளுவர் தின விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. பேராசிரியர் அன்வர் பாட்ஷாவிற்கு, திருவள்ளு வர் விருது; முன்னாள் அமைச்சர் பொன்னையன் - பெரியார் விருது வழங்கப்பட்டது.
மேலும், மருத்துவர் ராமகுரு - அம்பேத்கர் விருது; பேராசிரியர் அய்க்கண் - அண்ணா விருது; நெடுமாறன் - காமராஜர் விருது; கவிஞர் பாரதி சுகுமாறன் - பாரதியார் விருது; முனைவர் கணேசன் - திரு.வி.க., விருது; கலைப்பித்தன் - கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கப்பட்டது.அடையாளம்விருதுகளை வழங்கி, முதல்வர் பழனிசாமி பேசியதாவது:ஒரு நாட்டுக்கே அடையாளம், மொழி என்பதால், அது, உயிரினும் மேலானதாக காக்கப்பட வேண்டும் என்பதில், அரசு உறுதியாக உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும், தனித்தன்மை உண்டு.
ஆனால், நம் தமிழ் மொழிக்கு இருக்கும் சிறப்புகள், வேறு மொழிகளுக்கு நிச்சயமாக இருக்காது.கல்லுாரிகள், பல்கலைகளில், ஆராய்ச்சி மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட, ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தையும், ஒரே தளத்தில் வெளியிடுவதற்கான, பணிகள் துவக்கப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்காடு மொழியாக, தமிழ் இருக்க வேண்டும் என, அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
செந்தமிழ் சொல் பிறப்பியல் பேரகராதியை, புதிய கலைச்சொற்களை சேர்த்து, திருத்திய பதிப்பாக, 8,000 பக்கங்களுடன், ஏழு தொகுப்புகளாக, வெளியிட உள்ளோம். இது, உலகத் தமிழர்கள் அனைவருக்கும், பயன்படும் வகையில் அமைந்து இருக்கும்.தஞ்சாவூர் பல்கலை நுாலகத்தில் உள்ள, அரிய நுால்களை, டிஜிட்டல் மயமாக்கும் பணி நடந்து வருகிறது. சிலைசென்னை, மெரினா வளாகத்தில், தொல்காப்பியர் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மறைந்த, கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகோதேவன் எழுதிய நுால்களை நாட்டுடமையாக்க, அரசு பரிசீலிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement