Advertisement

பல்கலை சட்டப்பிரிவு என்ன செய்கிறது? செனட் உறுப்பினர்கள் சரமாரி கேள்வி

கோவை : &'தொலைதுார கல்வி மைய விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவாகும் வரை, பல்கலை சட்டப்பிரிவு என்ன செய்துகொண்டிருந்தது&' என, நேற்று நடந்த செனட் கூட்டத்தில், உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.பாரதியார் பல்கலை செனட் கூட்டம், நேற்று காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடந்தது; 160 உறுப்பினர்கள் பங்கேற்று, பல்கலை நிர்வாக குளறுபடிகள் குறித்து பல்வேறு கேள்வி எழுப்பினர்.
சட்டப்பிரிவு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க, உறுப்பினர்கள் பரிந்துரைத்தனர்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தணிக்கை தடை, ஆண்டு அறிக்கை, உறுப்பு கல்லுாரிகளின் நிலைப்பாடு, ஆசிரியரல்லாத காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் குறித்து கேள்விகளின் அடிப்படையில் விவாதம் நடந்தது. பல்கலை தரப்பில், பதிவாளர் (பொறுப்பு) வனிதா, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு, சிண்டிகேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறுகையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பேச இயலாது. செனட் உறுப்பினர்கள் பரிந்துரைப்படி, பல்கலை சட்டப்பிரிவு செயல்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். தவிர, ஆண்டு அறிக்கை, தணிக்கை தடை குறித்து பேசப்பட்டது,&'&' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement