Advertisement

மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்காதது ஏன்

மதுரை: மதுரையில் கல்வித்துறை செயல்பாடு, பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிப்பது குறித்து கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆய்வு கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி முன்னிலை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் முத்தையா, மீனாவதி, அமுதா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் சின்னதுரை, ரகுபதி பங்கேற்றனர். கல்வி மாவட்டங்கள் வாரியாக ஆய்வுநடந்தது.
கலெக்டர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருந்தும் மாணவர்கள் எண்ணிக்கை ஏன் அதிகரிக்கவில்லை. ஆசிரியர்கள் முழு பலத்துடன் பணிபுரிந்து மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அரையாண்டு தேர்ச்சி குறைவாக உள்ளது.
பொதுத் தேர்வில் மாநில தேர்ச்சியை விட மாவட்ட தேர்ச்சி சதவீதம் குறைய கூடாது. வரும் கல்வியாண்டில் முதல் 5 இடங்களுக்குள் மதுரை வர வேண்டும் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement