Advertisement

அறிஞர்களுக்கு அழைப்பு...


சுத்தமான காற்று, தூய்மையான நீர், வேளாண் மற்றும் உணவு பொருள் உற்பத்தி அதிகரிப்பு, மலிவு விலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் குடியிருப்பு ஆகியவற்றை சாத்தியமாக்கும் வகையில், நமது நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் நிபுணர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று பஞ்சாபில் உள்ள லவ்லி புரொபஷனல் பல்கலைக்கழகத்தில் நடந்த 106வது இந்திய அறிவியல் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
சாமானிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான பணிகளில் ஈடுபடுவதோடு, பேரிடர் தடுப்பு மேலாண்மை, ஊட்டச்சத்து மேம்பாடு, நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றிலும் விஞ்ஞானிகள் தீவிரமாக செயல்பட்டு உரிய தீர்வுகாண வேண்டும். கலை, அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை இணைந்த கூட்டு ஆராய்ச்சி சூழல் உருவாக வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement