Advertisement

கல்வி கட்டணம் திருப்பி செலுத்த கோர்ட் உத்தரவு

கோவை, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகனை, சரவணம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில், 2012ல், எட்டாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்தார். அவருக்கு பள்ளியில் இருந்து பிப்., 26ல் வந்த கடிதத்தில், அட்மிஷனுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகம் தெரிவித்தபடி, பணத்தை செலுத்தினார். அதன் பின், பருவ கட்டணமாக 74,650 ரூபாய் செலுத்தினார். பள்ளி திறப்பதற்கு இரண்டு மாதத்துக்கு முன், தனது மகனை வேறு பள்ளியில் சேர்த்து விட்டதாகவும், ஏற்கனவே செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி தருமாறும், பள்ளி நிர்வாகத்திடம் கேட்டார். ஆனால், 25,000 ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்த பள்ளி நிர்வாகம், மீதி பணத்தை தர மறுத்தது. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும், உரிய பதில் அளிக்கவில்லை. பார்த்திபன், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த நீதிமன்ற தலைவர் பாலச்சந்திரன் அளித்த தீர்ப்பு: பள்ளி துவங்குவற்கு முன்பே, மனுதாரர் கட்டணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஒரு நாள் கூட, மாணவன் பள்ளிக்கு செல்லாத நிலையில், அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி கொடுக்காமல், சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு மீதி தொகை 1.49 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய், வழக்கு செலவு தொகை 3,000 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தீர்ப்பளித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement