Load Image
Advertisement

செக் குடியரசு உதவித்தொகை

செக் குடியரசின் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை திட்டத்தில் இந்திய மாணவர்களும் அந்நாட்டு தூதரகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்:செக் குடியரசின் பொது கல்வி நிறுவனங்களில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி மொழி: பயிற்சியின் முதன்மை மொழி செக். உதவித்தொகை பெறுபவர்கள் சில ஆங்கில படிப்புகளிலும் அனுமதிக்கப்படலாம்.
உதவித்தொகை விபரம்:* செக் கல்வி நிறுவனங்களில் 2 மாதங்கள் முதல் 10 மாதங்கள் வரை கல்வி அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்பை பெற முடியும். அதற்கான கல்விக்கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.* பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் சுமார் 33,000 ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு சுமார் 35,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.* இவைதவிர, தள்ளுபடி கட்டணத்தில் தங்குமிடம் மற்றும் மூன்று நேரமும் உணவு வழங்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்:* கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அழைப்புக் கடிதம்* மாணவரது கல்வி விபரம்* கல்வி மேற்பார்வையாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரண்டு பரிந்துரை கடிதங்கள்* கல்வி சான்று நகழ்கள்* பாஸ்போர்ட் நகல்* கலைத்துறை சார்ந்த மாணவர்கள் கலைப் பணியின் மாதிரி புகைப்படங்கள், இசை நிகழ்ச்சியின் வீடியோ/ஆடியோ பதிவு போன்றவை.
விண்ணப்பிக்கும் முறை: குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு மாணவர் சேர்க்கைக்கான அழைப்பு கடிதத்தை பெற வேண்டும். தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செக் குடியரசின் தூதரகம், 50-எம், நிதி மார்க், சாணக்யபுரி, புதுடில்லி -110021 என்ற முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு: www.education.gov.in, www.mzv.cz/newdelhi/en மற்றும் www.msmt.cz

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement