அறிவோம் ஐ.சி.எஸ்.ஐ.,
’கம்பெனி செக்ரெட்டரி’ தகுதிக்கான தேர்வை நடத்துதல், பயிற்சி அளித்தல், பதிவு செய்தல் மற்றும் உறுப்பினருக்கான தரத்தை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வ தொழில்முறை அமைப்பு, ‘தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரெட்டரிஸ் ஆப் இந்தியா’.
சிறப்பம்சங்கள்:நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட கம்பெனி செக்ரெட்டரிஸ் சட்டம் 1980ன் படி, இந்திய அரசால் இந்த நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. தரமான கல்வியை வழங்குவதற்காக கம்பெனி செக்ரெட்டரிஸ் படிப்பிற்கான பாடத்திட்டத்தை வரையறுப்பதோடு, கம்பெனி செக்ரெட்டரிஸ் உறுப்பினர்களுக்கான சிறந்த தர மதிப்பீடுகளையும் நிர்ணயிக்கிறது.
2.5 மாணவர்களுக்கு கம்பெனி செக்ரெட்டரிஷிப் குறித்த கல்வியை வழங்குவதோடு, 65 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. புதுடில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பிற்கு சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேலும், நாடு முழுவதிலும் 72 கிளைகள், 171 பயிற்சி மையங்கள், 200க்கும் அதிகமான தேர்வு மையங்கள் உள்ளன. யு.ஏ.இ., யு.எஸ்., யு.கே., சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் மையங்கள் செயல்படுகின்றன.
வழங்கப்படும் படிப்புகள்:* ஒருங்கிணைக்கப்பட்ட முழுநேர கம்பெனி செக்ரெட்டரி படிப்பு* பி.எம்.க்யூ., படிப்புகள்* சான்றிதழ் படிப்புகள்* குறுகியகால படிப்புகள்* ஆன்லைன் வாயிலான படிப்புகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள்
சி.எஸ்.இ.இ.டி., தேர்வு:ஒரு 'கம்பெனி செக்ரெட்டரி’யாக வளம்வர விரும்புபவர்கள் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வான 'கம்பெனி செக்ரெட்டரிஸ் எக்சிகியூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட்’ ஐ.சி.எஸ்.ஐ.,யால் நடத்தப்படுகிறது. 12 வகுப்பு அல்லது அதற்கான தகுதியை பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.
சி.எஸ்., ஆவது எப்படி:சி.எஸ்.இ.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள், ஐ.சி.எஸ்.ஐ.,யின் பவுண்டேஷன் படிப்பை நிறைவு செய்தவர்கள், ஐ.சி.ஏ.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள், சி.எம்.ஏ., தேர்ச்சி பெற்றவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் சி.எஸ்., எக்ஸிகியூட்டிவ் படிப்பில் சேரலாம்.
அதனையடுத்து, சி.எஸ்., புரொபஷனல் புரொகிராமில் சேர்ந்து, அதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய வேண்டும். இறுதியாக, உறுப்பினராவதற்கு முந்தைய பயிற்சியை மேற்கொண்டு ஐ.சி.எஸ்.ஐ.,யில் பதிவு செய்பவர்கள், ’கம்பெனி செக்ரெட்டரி’ ஆக தங்களது பணியை தொடரலாம்.
விபரங்களுக்கு: www.icsi.edu
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!