Load Image
Advertisement

ஹிரோஷிமா பல்கலை உதவித்தொகை

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் தகுதியுடைய வெளிநாட்டு மாணவர்கள் உதவித்தொகை பெறும் வாய்ப்பு உண்டு. இப்பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
பாடப்பிரிவுகள்:அப்ளைடு கெமிஸ்ட்ரிகெமிக்கல் இன்ஜினியரிங்எலக்ட்ரிக்கல், சிஸ்டம்ஸ் அண்டு கண்ட்ரோல் இன்ஜினியரிங்மெக்கானிக்கல் இன்ஜினியரிங்டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்டு என்விரான்மெண்டல் சிஸ்டம்ஸ்ஆர்க்கிடெக்சர்சிவில் அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்இன்பர்மேடிக்ஸ் அண்டு டேட்டா சயின்ஸ்ஸ்மார்ட் இன்னோவேஷன்

தகுதிகள்:* ஹிரோஷிமா பல்கலைக்கழகத்தில் அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்ற அல்லது தற்போது படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவராக இருத்தல் வேண்டும். இப்பல்கலைக்கழகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.* ஜப்பானில் உயர்கல்வி கற்பதோடு ஹிரோஷிமாவில் வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.* ஜப்பானிய மொழி தெரிந்த அல்லது கற்கும் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.* டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில மொழிப்புலமை பரிசோதனை தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம்.
உதவித்தொகை விபரம்:உதவித்தொகை பெற தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் சுமார் ரூ.64 ஆயிரம் வீதம் மொத்தம் 24 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:உரிய தகுதி உள்ள மாணவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் https://www.hiroshima-u.ac.jp/en/nyugaku எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: https://annauniv.edu/pdf/hiro2023.pdf

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement