நீட் - பி.ஜி.,
முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அவசியம் எழுத வேண்டிய தேர்வு, ‘நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட் - போஸ்ட் கிராஜுவேட்’.
படிப்புகள் மற்றும் தேர்வுகள்:எம்.டி., எம்.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவ டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெற நீட் - பி.ஜி., தேர்வும், எம்.டி.எஸ்., படிப்பில் சேர்க்கை பெற நீட்- எம்.டி.எஸ்., தேர்வும் எழுத வேண்டும்.
இத்தேர்வுகளை, இந்திய அரசால் நிறுவப்பட்ட என்.பி.இ.எம்.எஸ்., எனும் 'நேஷனல் போர்டு ஆப் எக்சாமினேஷன் இன் மெடிக்கல் சயின்சஸ்’ அமைப்பு நடத்துகிறது. எந்த ஒரு மாநில அரசோ, தனியார் மருத்துவ கல்லூரிகளோ அல்லது பல்கலைக்கழகங்களோ மருத்துவ படிப்புகளுக்காக எந்த ஒரு நுழைவுத்தேர்வையும் தனியாக நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் மற்றும் சேர்க்கை இடங்கள்:* மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் ஒப்படைக்கப்படும் 50 சதவீத அனைத்திந்திய இட ஒதுக்கீட்டு இடங்கள்.* மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இட ஒதுக்கீட்டு இடங்கள்.* நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தனியார், பல்கலைக்கழக, நிகர்நிலை பல்கலைக்கழக இடங்கள்.* ராணுவ மருத்துவ கல்வி நிறுவனங்கள்.* போஸ்ட் எம்.பி.பி.எஸ்., டி.என்.பி., படிப்புகள், நேரடி 6 ஆண்டு டி.ஆர்.என்.பி., மற்றும் போஸ்ட் எம்.பி.பி.எஸ்., என்.பி.இ.எம்.எஸ். டிப்ளமா படிப்புகள்.* எய்ம்ஸ்., கல்வி நிறுவனங்கள்.* பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., சண்டிகர்* ஜிப்மர், புதுச்சேரி* நிமான்ஸ், பெங்களூரு* ஸ்ரீ சித்திரை திருநாள் இன்ஸ்டிடியூட் பார் மெடிக்கல் சயின்சஸ் அண்டு டெக்னாலஜி, திருவனந்தபுரம்.
விண்ணப்பிக்கும் முறை: https://nbe.edu.in/ எனும் இணையதளம் வாயிலாக குறிப்பிட்ட படிப்புகளுக்கான தேர்வை எழுத ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நாட்டின் பல்வேறு நகரங்களில் தேர்வுகளுக்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் விரும்பும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம்.
விபரங்களுக்கு: https://nbe.edu.in/
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!