Load Image
Advertisement

ஜிமேட்

வணிக மற்றும் மேலாண்மை பிரிவுகளில் முழுநேர அல்லது பகுதிநேர எம்.பி.ஏ., அல்லது முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கும் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேர்வு ஜிமேட்!
அறிமுகம்இந்த கிரேஜுவேட் மேனேஜ்மெண்ட் அட்மிஷன் தேர்வை உலகம் முழுவதிலும் 110க்கும் அதிகமான நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன. ஜிமேட் மதிப்பெண் அடிப்படையில், 2 ஆயிரத்து 400 கல்வி நிறுவனங்களில், 7 ஆயிரத்து 700க்கும் அதிகமான படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பிசினஸ் ஸ்கூல் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். ’சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., படிப்பில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கும் 10 மாணவர்களில் 7 பேர் இத்தேர்வை எழுதுபவர்கள் என்றும் பொதுவாக எம்.பி.ஏ., படிப்பில் சேரும் 10 மாணவர்களில் 9 பேர் இத்தேர்வை எழுதுபவர்கள் என்றும் இத்தேர்வை நடத்தும் ஜிமேக் அமைப்பு தெரிவிக்கிறது.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வில், அனலிட்டிக்கல் ரைட்டிங் அசெஸ்மெண்ட், இன்டெக்ரேட்டடு ரீசனிங், குவான்டிடேடிவ் ரீசனிங் மற்றும் வெர்பல் ரீசனிங் ஆகிய 4 பிரிவுகளில் மாணவர்களது திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
மொத்த தேர்வு நேரம்: 3:07 மணி நேரம்
தகுதி: இந்தத் தேர்வினை எழுத வயது வரம்பு ஏதுமில்லை. ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும்.
சேர்க்கை முறை: சில கல்வி நிறுவனங்கள் ஜிமேட் தேர்வில் மாணவர்கள் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில கல்வி நிறுவனங்கள், இந்த நான்கு பிரிவுகளில் குறிப்பிட்ட ஒன்றோ அல்லது இரண்டு பிரிவுகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் அளித்து மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. எனவே, சேர்க்கை பெற விரும்பும் கல்வி நிறுவனத்தின் சேர்க்கை முறைக்கேற்ப மாணவர்கள் தேர்விற்கு தயாராவது நல்லது.
இந்தத் தேர்வின் மதிப்பெண்கள், ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். ஒரு மாணவர் அதிகபட்சமாக 8 முறை இந்தத் தேர்வை எழுதலாம். ஓர் ஆண்டில் மொத்தம் 5 முறை இந்த தேர்வை எழுத முடியும். ஆங்கில மொழியில் மட்டுமே இத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வாயிலாக இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு: www.mba.com

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement