Advertisement

ஊராட்சிகளில் தொடரும் நிதி பிரச்னை

  • எழுத்தின் அளவு:

கம்பம்,:ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் கொரோனா தடுப்பு, பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. அரசு மானியங்கள் மூலம் ஊழியர்களுக்கு சம்பளம், மின்கட்டணம், பொதுச் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும். மார்ச் முதல் கொரோனா தடுப்பு பணிகள் மட்டுமே செய்யப்படுகிறது. 5 மாதங் களாக ஊராட்சிகளுக்கு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இதனால் சம்பளம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.



கொரோனா தடுப்புபணிக்காக ஊராட்சி தலைவர்கள் சொந்தப்பணத்தைச் செலவழித்து வருகின்றனர்.இதனிடையே 15வது நிதிக்குழு மானியத்தில் இருந்து ரூ. 2 லட்சத்தை டிரான்ஸ்பர் செய்து பயன்படுத்திக்கொள்ள அனுமதி கிடைத்தது.அதில் சில இடர் பாடுகள் உள்ளன. விரைவில் அது தீர்க்கப்பட்டு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)