Advertisement

சித்த மருத்துவ உள்நோயாளிகள் பிரிவு செயல்படுவது எப்போது

  • எழுத்தின் அளவு:

பழநி:பழநியில் தாலுகா அலுவலக வளாகத்தில் அரசு சித்தமருத்துவ உள்நோயாளிகள் பிரிவு செயல்படாமல் உள்ளது.



பழநியில் சித்தமருத்துவக்கல்லுாரி துவக்குவதற்காக முதற்கட்டமாக 2019ல் பழநி தாலுகா அலுவலக வளாகத்தில் 60 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவு துவங்கி சிலநாட்கள் செயல்பட்டது. பின்பு ரூ. 5 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை யால் பராமரிப்பு பணிகள் நடந்தன.அதன்பின் இன்றுவரை திறக்கப்படாமல் உள்ளது.



அரசு சித்த மருத்துவர் மகேந்திரன் கூறியதாவது: சித்த மருத்துவ கல்லுாரி உள்நோயாளிகள் பிரிவை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார். ஒருங்கிணைப்பு குழு பொருளாளர் அனந்த சுப்ரமணியன் கூறுகையில், இதுகுறித்து பிரதமர், மத்திய அரசின் ஆயுஷ் துறை, தமிழக முதல்வர் மற்றும் சுகாதார துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)