Advertisement

மின் மயானத்தில் பூஜை அறை திறப்பு

  • எழுத்தின் அளவு:

அனுப்பர்பாளையம்:திருப்பூரில் உள்ள அனைத்து லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில், அறக்கட்டளை மூலம் அனுப்பர்பாளையம், ஆத்துபாளையத்தில், 4 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது.மயானத்தில், உடலை அடக்கம் செய்ய வருபவர்கள் பூஜை செய்ய, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு பூஜை அறை, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ் குழாய் கிணறு மற்றும் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. கிளப் கவர்னர் கருணாநிதி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.மின்மயான அறக்கட்டளை தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி, துணை தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் மயில்சாமி, லயன்ஸ் கிளப் துணை கவர்னர்கள் நடராஜன், ராம்குமார், ஏற்றுமதியாளர்கள் சங்க துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பங்கேற்றனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)