Advertisement

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுஎட்டு மாணவர்கள் 500க்கு 500

  • எழுத்தின் அளவு:

ராமநாதபுரம், :ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் பொதுத்தேர்வு முடிவில், தனியார் பள்ளிகளை சேர்ந்த எட்டு மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் நுாற்றுக்கு நுாறு பெற்று 500க்கு 500 மதிப்பெண் பெற்றுஉள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019--20 கல்வியாண்டில் 257 பள்ளிகளைசேர்ந்த 8437 மாணவிகள்உட்பட 16,517 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்தனர்.கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதாமல் அனைவரும் 'ஆல் பாஸ்' ஆகியுள்ளனர். காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.



மாவட்டத்தில் தனியார் பள்ளிகளை சேர்ந்த எட்டு மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சென்டம் பெற்று மொத்தம் 500க்கு 500 மதிப்பெண் பெற்றுஉள்ளனர். அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களில் 2பேர் மட்டும் தமிழ் பாடத்தில் சென்டம் பெற்றுள்ளனர். பிற பாடங்களில் ஒன்றில்கூட சென்டம் பெறவில்லை.பாடம் வாரியாக தமிழ் 15பேர், ஆங்கிலம் - 9பேர், கணிதம் -56 பேர், அறிவியல் - 80 பேர், சமூக அறிவியல்- 35 பேர் சென்டம் பெற்றுள்ளதாகபள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)