Advertisement

ராமநாதபுரத்தில் ஈச்சம் குச்சி துடைப்பத்திற்கு மவுசு

  • எழுத்தின் அளவு:

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் வெளியூர்களிலிருந்து ஈச்சம் குச்சி வாங்கி துடைப்பம் செய்கின்றனர். அவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.பொதுவாக தென்னையை விட ஈச்சம் குச்சியில் தயாரிக்கப்படும் துடைப்பத்திற்கு எப்போதுமே கிராக்கி தான்.



ஈச்சம்குச்சிகள் எளிதாக கிடைப்பது இல்லை.வெளியூர்களில் இருந்து வாங்கி வந்து தயாரிக்கின்றனர். ஈச்சம் மாறு ஒன்று ரூ.60 முதல் ரூ.80 வரை தரத்திற்கு ஏற்ப விற்கின்றனர். சாயல்குடி வியாபாரிலதா கூறுகையில், 'பரமக்குடி, மானாமதுரையில் இருந்து ஈச்சம் குச்சி வாங்கி வந்து, கைப்பிடியுடன் துடைப்பம் தயார் செய்கிறோம். தென்னையை விட நெருக்க மாகவும், சுத்தம்செய்வதற்கு எளிதாக இருப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். ஊரடங்கு காலம் என்பதால் விற்பனை மந்தமாக உள்ளது,' என்றார்.-

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)