Advertisement

நகைக்காக இளம்பெண் கொலை பெண் உட்பட மூவர் கைது

  • எழுத்தின் அளவு:

சிவகாசி:சிவகாசி அருகே திருமணமாகி ஒரு மாதமே ஆன இளம்பெண்ணை நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்த பெண் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்


இங்கு உள்ள ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி செல்வமணிகண்டன் 26, மனைவி பிரகதி மோனிகா 24. திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. இரு நாட்களுக்கு முன்பு பிரகதி மோனிகா கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு பவுன் தங்க செயின் , தாலி திருடு போனது. டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடினர்.



சிவகாசி கிழக்கு இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியின் போது திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்த கோடீஸ்வரன் 20, சேகரை 19, பிடித்து விசாரித்தனர். பட்டாசு தொழிலாளர்களான இருவரும் செலவிற்கு பணம் இல்லாததால் திருட்டில் ஈடுபட்டு கொலை செய்ததாக தெரிவித்தனர். இவர்களுக்கு கோடீஸ்வரன் தாயார் பரமேஸ்வரி 40, உதவி செய்ததால் அவரையும் கைது செய்தனர்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)