Advertisement

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐ., கொரோனாவுக்கு பலி

  • எழுத்தின் அளவு:

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில், வியாபாரிகள் ஜெயராஜ், மகன் பெனிக்ஸ், ஆகியோர் இறந்தனர். வழக்கை விசாரித்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு, எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


nsmimg797545nsmimg

இந்நிலையில், கடந்த 24ம் தேதி, சிறப்பு எஸ்.ஐ., பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (28)
Rafi - Riyadh,சவுதி அரேபியா
11-ஆக்-2020 02:29 Report Abuse
Rafi கொரானாவினால் இறப்பு சதவிகிதம் ரொம்பவும் குறைவு தான், அப்படியிருக்க பலர் தப்பிக்க வழிவகுக்கப்பட்டதா?
Cheran Perumal - Radhapuram,இந்தியா
10-ஆக்-2020 19:56 Report Abuse
Cheran Perumal இப்போ இவர் சாவுக்கு யார் பொறுப்பேற்பது?
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-ஆக்-2020 15:26 Report Abuse
தமிழ் மைந்தன் இவரால் துன்புறுத்தி கொல்லப்பட்டதாக கூறப்படும் அந்த இரண்டு விசாரணை கைதிகளுக்கும் கொரானா சோதனை ஏன் செய்யப்படவில்லை..........அவர்களால் தமிழ கம்பெனியின் ரகசியம் வெளிவரும் எனபதாலா?......
Shroog - Mumbai ,இந்தியா
10-ஆக்-2020 13:54 Report Abuse
Shroog கொலை பழி யாரையும் விட்டு போகாது. தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
அறவோன் - Chennai,இந்தியா
10-ஆக்-2020 13:37 Report Abuse
அறவோன் நீதிமன்றத்துக்கு நேரம், ஒரு வேலை மிச்சமாகியிருக்கிறது
Ramesh Sargam - Bangalore,இந்தியா
10-ஆக்-2020 13:15 Report Abuse
Ramesh Sargam "தெய்வம் நின்று கொல்லும்" என்பதற்கு இதுதான் சிறந்த உதாரணம். ஆகையால், மக்களே, யாருக்கும் மனதளவிலும் தீங்கு செய்யாதீர்கள், தீங்கு நினைக்காதீர்கள்.
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
10-ஆக்-2020 13:08 Report Abuse
D.Ambujavalli இந்தக் கொரானா எவ்வளவு சவுகரியமாக இருக்கிறது நர்ஸ் இறப்பிற்கு நிவாரணம் என்று வரும்பொழுது வேறு நோய் என்று மாறுகிறது, இப்போது பெரிய தலை எதையோ காப்பாற்ற பலி என்று பழியை ஏற்றுக்கொள்கிறது இவர் கைதாகும்போதே ஒருவிதமாக சிரித்துக்கொண்டே போனார், பின்பும் ரொம்ப புலம்பினார். எதையோ வெளியிட்டுவிடுவாரோ என்று கொரானாவை வைத்து விளையாடியிருக்கலாமோ?
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
10-ஆக்-2020 13:03 Report Abuse
Thiagarajan Kodandaraman என்னதான் இருந்தாலும் பல ஆண்டுகள் காவல்காரராக மக்களுக்கு சேவை செய்துள்ளார் ..அவரின் குடும்பம் காப்பாற்றப்படவேண்டும் பெரிய நிதி அணைத்து சமூகமும் கட்சிகளும் அரசும் அந்த குடும்பத்துக்கு அளிக்கவேண்டும்
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
10-ஆக்-2020 12:14 Report Abuse
Subramanian Arunachalam இப்போதாவது நம் ஊடகங்கள் வாயை மூடி கொள்ளுமா. இந்த வழக்கில் செலுத்திய கவனத்தை ஏன் திரு வில்சன் கொலை கேசில் செலுத்த வில்லை . திரு வில்சன் கொலையாளிகளுக்கு ஜாமீன் கிடைக்கும் வரை அதை பற்றி வாயே ஏன் திறக்கவில்லை
அறவோன் - Chennai,இந்தியா
10-ஆக்-2020 13:04Report Abuse
அறவோன்இது அரசு செய்த (சித்ரவதை) கொலைகள்...
N S - Nellai,இந்தியா
10-ஆக்-2020 11:20 Report Abuse
N S என்ன என்ன சொல்ல நினைத்தாரோ? உண்மை வெளியில் வரவேண்டும். ....இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ...
மேலும் 17 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)