Advertisement

'புதிய கல்வி கொள்கையை தடுத்திட வேண்டாம்'

  • எழுத்தின் அளவு:

சென்னை : 'புதிய கல்வி கொள்கையை, மொழி குறித்து மட்டும் பேசி, தடுத்துவிட வேண்டாம்' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: புதிய கல்வி கொள்கை, ஆரம்ப பள்ளி முதல் உயர் கல்வி வரை, உலகத் தரத்திலான கல்வியை, மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இதனால், கல்வி துறையின் அனைத்து பிரிவுகளும் மேம்படும். தாய்மொழி கல்வி கட்டாயமாவதை, அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர். புதிய கல்வி கொள்கை தமிழகத்திற்கு மட்டுமானதல்ல; நாடு முழுமைக்குமானது.ஹிந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என, எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. கல்வி கற்க, மகிழ்வான, உற்சாகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவர். தமிழகத்தில், சி.பி.எஸ்.சி., - மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இப்பள்ளிகளில், பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பை, அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இழக்கின்றனர்.ஹிந்தியோ, மற்றொரு இந்திய மொழியோ, கற்க விரும்பும் மாணவர்கள் ஆர்வத்திற்கும், பெற்றோர் விருப்பத்திற்கும், நாம் தான் இடையூறாக இருக்கிறோம். இந்திய மாணவர்களின், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி, உலக அளவில் அவர்களின் போட்டித் திறன் ஆகியவற்றை அதிகரிக்க செய்யும், புதிய கல்வி கொள்கையை, மொழி குறித்து மட்டும் பேசி, தடுத்துவிட வேண்டாம். கூடுதலாக ஒரு மொழியை கற்க, மாணவர்கள் தயாராக உள்ளனர்; அவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (48)
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-ஆக்-2020 14:03 Report Abuse
Malick Raja சம்பளமாக வருமானமே .. அல்லது மொத்தமாக தொகையா ? அல்லது கூவுவதற்கு தகுந்தாற்போல வருமானமா? அங்கே ராம்நாத் ஜனாதிபதி ஒப்புக்கு .. இங்கே சப்பாணியாக இருப்பதும் தெளிவுதானே
வெற்றிக்கொடிகட்டு. - -மதராஸ்:-),இந்தியா
05-ஆக்-2020 20:04 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு. புதிய தலைவர் உன்னியே தமிழ்நாட்டில் உன் கட்சியில் ஏற்றுக்கொள்ளவில்லை நயினார் ஒப்பனா சொல்லி விட்டார் , ராதாரவி சிரித்தார் Sv சேகர் பாவம் வெறுப்பாகிவிட்டார்
அண்ணா.வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் வண்டு முருகனே இது கல்வி கொள்கையா இல்லை மொழி கொள்கையா அது சொல்லு , மொழி என்பது அறிவு இல்லை ஏன் ஹிந்தி படிச்சவன் பாணி பூரித்தான் விற்றான் திரும்பி நடந்து போனான் , கல்வியில் ஹிந்தி சான்ஸ்கிரிட் எல்லாம் ஏன் வருது இதற்கு விளக்கம் சொல்லு
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
05-ஆக்-2020 20:01 Report Abuse
nagendirank நம் மக்களின் சிந்தனையை நாம் புரிந்துகொள்ள முடியல. புதுசா செல் போன், புடவை , வீடு , வசதி , வேலை இப்படி என்ன வந்தா உடனே ஏத்துக்குறாங்க . கல்வி வந்தா மட்டும் ஏன் எதிர்ப்பு? சைனீஸ் , பிரெஞ்சு ,ஜாப்பனீஸ் படிக்க நாம் தயார் . ஆனால் தாய்மொழி தமிழ் , தெய்வ மொழி சமஸ்க்ரிதம் மட்டும் போராட்டமா. புதியதை ஏற்று கொள்ள பழகுவோம் பின் அதில் பிரச்சனைகள் என்றால் பேசுவோம்
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
05-ஆக்-2020 19:37 Report Abuse
Suresh Ulaganathan தமிழ் நாட்டில் தான் கல்வி தரம் உள்ளது. அதை சிதைப்பது தான் இந்த கல்வி கொள்கை. இன்றும் பக்கத்துக்கு மாநிலங்கலில் இருந்து மாணவர்கள் தமிழ் நாட்டில் தான் படிக்கிறார்கள். காரணம் கட்டணம் குறைவு.
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
05-ஆக்-2020 19:29 Report Abuse
Suresh Ulaganathan CBSE , MATRICULATION , ICSE , stateboard, KENDRIYAVIDYALA இப்படி பாட திட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஏன் ஒரே கல்வி முறை இல்லை ? 5+3+3+4 தேர்வு முறையை ரத்து செய்யுங்கள் , அகில இந்திய அளவில் ஒரே பாட திட்டம் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுதான் உண்மையான கல்வி கொள்கை.
madhavan rajan - trichy,இந்தியா
05-ஆக்-2020 19:12 Report Abuse
madhavan rajan நல்லதையெல்லாம் தடுப்பதுதான் தமிழ்நாட்டின் சிறப்பு. மத்திய அரசு நிதி கொடுத்து ஆரம்பித்த பள்ளிகளை தமிழகத்திற்கு வேண்டாம் என்று கூறி பல ஏழைக்குழந்தைகளுக்கு வாய்ப்பை மறுத்தார்கள். இப்போது ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக படியுங்கள் என்றால் வேண்டாம் என்று கூறி மக்கள் அறியாமையில் இருப்பதில் சந்தோஷமடைவார்கள் தமிழ் நாட்டின் கழகத் தலைவர்கள். ஆனால் அவர்கள் பிள்ளைகள் மட்டும் பலவற்றையும் கற்று அவர்களுக்கு பின் பாராளுமன்ற உறுப்பினராகவேண்டும், அரசியல் தலைவராக வேண்டும். சாதாரண ஏழைமக்கள் நன்றாக வாழ்ந்தால் அவர்களுக்கு பொறுக்காது. அவர்களை சோம்பேறிகளாக்கி, இலவசத்துக்கு அலையவைத்து அவர்களுடைய பாராளுமன்ற உறுப்பினரே தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்லவைப்பார்கள். அதையும் பாராட்டாக ஏற்று தமிழக மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். திருவள்ளுவர் சொன்னதை இதில் மட்டும்தான் தமிழக மக்கள் செய்வார்கள்... இன்னா செய்தாரை ஒறுத்தல் .....................
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஆக்-2020 18:58 Report Abuse
தமிழ்வேல் அரசு பள்ளியை தனியார் பள்ளிபோல சம்பந்தப் படுத்திப் பேசும்போது வரும் கேள்வி: 3 மொழி கட்டாயம் என்னும்போது, ஒரு மாணவர், முன்றாவது மொழியாக சீன மொழியையோ அல்லது பிரன்சு மொழியையோ (உதாரணத்திற்கு) கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்களுக்கு இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து வேற்று ஏற்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் இருக்குமா ?
Sampath Kumar - chennai,இந்தியா
05-ஆக்-2020 13:36 Report Abuse
Sampath Kumar அய்யா ரங்கு மறுபடி மரம் ஏறாதே நல்ல படுத்திவிட்டு பதிவு போடு மொழி மட்டும் பிரச்னை இல்லை இதில் மறைத்து உள்ள உள்ளநோக்கம் மட்டும் தான் படிகூனும் மற்றவர் இல்லை
Jayvee - chennai,இந்தியா
05-ஆக்-2020 17:32Report Abuse
Jayveeதம்பி சம்பத்து.. சர்ச்சுல பாதிரி சொன்னான்னு உளறாம நீ ஒழுங்கா புதிய கல்விக்கொள்கையை படிச்சுப்பாரு.....
madhavan rajan - trichy,இந்தியா
05-ஆக்-2020 19:16Report Abuse
madhavan rajanஉள்நோக்கத்தை கூறுபவர்கள் நடத்தும் பள்ளிகளில் என்ன நிலைமை. அந்த தலைவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர், இரு மொழியோடு நிற்கின்றனரா, அவர்களின் பிள்ளைகளின் எவ்வளவு பேர்களுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியாது, சிலருக்கு பேசக்கூட தெரியாது போன்ற பல வெளிநோக்கங்கள் இருக்கின்றன. அவர்களுடைய பிள்ளைகளை பழமொழிகளில் படிக்கவைத்து வெளிநாட்டில் வியாபாரம் செய்ய அனுப்பிவிடுகின்றனர் (மாறன் சகோதரர்கள்) உங்கள் பிள்ளைகள் கும்மிடிப்பூண்டி தாண்டக்கூடாது. இந்த உள்நோக்கத்தை புரிந்துகொள்ளாதவரை தமிழக சாமானிய மக்களுக்கு விடிவுகாலம் கிடையாது. கலைஞரின் மகனுக்கு தமிழ் தவறில்லாமல் பேசத்தெரியுமா என்று பாருங்கள் முதலில்....
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-ஆக்-2020 22:52Report Abuse
தமிழ்வேல் மாதவன்ஜி, ஹிந்தி சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு வெளிநாடு சென்று ஆசிரியர் வேலைக்கு செல்லலாம். அதானே ?...
vbs manian - hyderabad,இந்தியா
05-ஆக்-2020 10:04 Report Abuse
vbs manian ஆ தி மு க தி மு க வுக்கு ஒத்து பாடாமல் சுய சிந்தனையோடு பிரச்சினைகளை அணுக வேண்டும்.
மேலும் 35 கருத்துக்கள்...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)