Advertisement

ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.30 கோடி நிதி: அறக்கட்டளை தகவல்

  • எழுத்தின் அளவு:

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று(ஆக.,4) வரை ரூ.30 கோடி நிதி வந்துள்ளது என ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார்.


nsmimg795961nsmimg


இந்நிலையில், கோவில் கட்டுவதற்கு வந்த நிதி விவரங்களை அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதுகுறித்து அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆக.,4 வரை ரூ.30 கோடி நிதி வந்துள்ளது. நாளை மேலும் ரூ.11 கோடி நிதி வரும் என எதிர்பாரக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து ரூ.7 கோடி நிதி வந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் அனுமதியை, அறக்கட்டளை முழுமையாக பெறாததால், அந்த நிதியை நிறுத்தி வைத்துள்ளோம். அனுமதி பெற்ற பின், பணத்தை பெற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Email ThisfacebooksShare on Google+Twitter

வாசகர் கருத்து (10)
sangu - coimbatore,இந்தியா
05-ஆக்-2020 08:50 Report Abuse
sangu நம் குடும்பத்தினரின் கனவை சிதைத்து ஆடம்பரம் செய்யாமல் குறைந்த பட்ச ஆடை, எங்கும் நடை என இருக்க முயல்வோம்
sangu - coimbatore,இந்தியா
05-ஆக்-2020 08:42 Report Abuse
sangu ஐயப்பன் அவர்களே த இ அ து மத சார்பற்றது எனவே பணம் அனுப்பாது.
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
05-ஆக்-2020 08:21 Report Abuse
VENKATASUBRAMANIAN எப்படி பெரியார் அண்ணா சிலைகள் வைத்ததுபோலவா. உனக்கு கற்பனை என்றால் மற்றவர்களுக்கு தெய்வம். இது அவரவர் நம்பிக்கை சார்ந்தவை. ஆனால் உங்களை போன்று சமாதியில் பால். பண்டங்கள் வைத்து முரசொலி பேப்பரையும் வைத்து விட்டு அடுத்தவரிடம் பகுத்தறிவு பேசும் செயல் இல்லை.
C.IYYAPPAN - Kanyakumari District,இந்தியா
05-ஆக்-2020 07:39 Report Abuse
C.IYYAPPAN ராமர் கோயில் கட்ட தமிழக இந்து அறநிலைத்துறை கொடுத்த நன்கொடை எவ்வளவு என அறிய ஆவலாக உள்ளேன்
Indhuindian - Chennai,இந்தியா
05-ஆக்-2020 06:24 Report Abuse
Indhuindian பணம் வருது சரி. அனுப்புறவங்களுக்கு ரசீது அனுப்புங்க அல்லது வந்து சேந்ததுன்னு ஒரு மெசேஜ் ஆவது அனுப்புங்க. பணம் அனுப்பனுவங்க சேந்துதா இல்லையாமே தெரியமா இருக்காங்க. பேங்க்லெந்து நேரா அனுப்பறதாலே இந்த கேள்வி. ஏன்னா இப்பெல்லாம் பேங்க் இருக்கற நிலைமையில் நடுவுலே யாராவது அட்டையை போடாம இருக்கணுமே.
Muruga Vel - Mumbai,இந்தியா
05-ஆக்-2020 05:55 Report Abuse
 Muruga Vel திருப்பதி முதல் ஷீரடி வரை தேவஸ்தானங்களும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் .. வடஇந்தியாவில் கலைநயம் நிறைந்த கோவில்கள் மிகவும் குறைவு ... அவுரங்கசீப் போன்ற ஆட்சியாளர்களால் கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டன ..இடிக்கப்பட்டன ..தென்னாடுகளில் நிறைய கலை நயம் மிக்க கோவில்கள் திராவிட ஆட்சியில் பொலிவு இழக்க ஆரம்பித்தன ..
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா 30 கோடி மக்களின் பணம் கற்பனை கடவுளுக்காக வீணடிக்கப்பட போகிறது
krish - chennai,இந்தியா
05-ஆக்-2020 08:29Report Abuse
krishஇன்றைய நிகழ்வு, நாளைய கற்பனை....
Anand - chennai,இந்தியா
05-ஆக்-2020 11:37Report Abuse
Anandதமிழ்வேந்தன், நீ கொஞ்சம்....... நடையை கட்டு, பந்திக்கே வேண்டான்னாலும் இலை ஓட்டை என ஊளையிட்டுக்கொண்டு....
Nallavan Nallavan இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா நீ நடையை கட்டுலே...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)